என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காஷ்மீர் என்கவுண்டர்"
- தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
- அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் பாரமுல்லா துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
அதேபோல் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.
இவன் சில நாட்களுக்கு முன் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
- புல்வாமா மாவட்டம் டிராப்கம் பகுதியில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது
- கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் மற்றும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவ்வகையில் நேற்று புல்வாமா மாவட்டம் டிராம்கம் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாகிகளை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில்,
லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அவர்கள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த ஆண்டுதான் இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்ததும் தெரியவந்தது.
இந்த ஆண்டில் இதுவரை 99 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐஜி விஜய குமார் தெரிவித்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் பணியில் போலீசும், ராணுவமும் ஈடுபட்டுள்ளனர்.
அதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirEncounter
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்றைய என்கவுண்டரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டையின்போது நமது பாதுகாப்பு படையினர் மிகவும் கவனமாக நடந்து கொள்ள தவறி விடுகின்றனர். இந்த வார இறுதி நாளும் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். #Pulwamaencounter #Militantskilled #Peoplekilled
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாத் பகுதியில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் கோகர்நாத் பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது கடோல் எனும் கிராமத்துக்குள் 3 தீவிரவாதிகளும் தஞ்சம் அடைந்து இருக்கும் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் அந்த கிராமத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து இனி தப்பிச்செல்ல இயலாது என்பதை உணர்ந்த தீவிரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினார்கள். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் 3 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அனந்த்நாக் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாவட்டம் முழுவதும் செல்போன் தகவல் தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது. #AnantnagEncounter
அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார். #JKEncounter
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்